விமல் வீரவன்ச வீடுகள் வழங்கிய விதம் தொடபான விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது அமைச்சின் கீழ் இரண்டுபிரதேசங்களில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்ங்களின் போது, நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்தொகுதி, குடும்பத்தினரிடையே பங்கிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டடு தொடர்பில் பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதந்போருட்டு, விமல் வீரவன்சவின் உறவினர் இருவர் உட்பட நான்கு நபர்களிடம், ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.



