Breaking News

சவுதி பெண்கள் கனவிலும் நடக்காது என நினைத்தது நடந்தெறியது இன்று !

தேர்தலில் போட்டியிடவே முடியாது என்று நினைத்த சவுதி பெண்கள் தற்போது பெருமை அடைந்துள்ளனர். முதன்முதலாக பெண்கள் வாக்களித்து போட்டியிட்ட சவுதி உள்ளாட்சி தேர்தலில் 17 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது, ஆண்கள் துணையில்லாமல் வெளியே செல்லக் கூடாது, வெளியே செல்கையில் முகம் தெரியாத அளவுக்கு பர்தா அணிய வேண்டும் என்று பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளது. 

அத்தகைய சவுதியில் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வாக்களிக்க மற்றும் போட்டியிட முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் 5 ஆயிரத்து 938 ஆண்களும், 978 பெண்களும் போட்டியிட்டனர். பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர்கள் ஆண் வாக்காளர்களை நேருக்கு நேர் பார்த்து ஓட்டு கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழலில் நடந்த தேர்தலில் 17 பெண்கள் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியுள்ளனர்.