நாளையதினம்; ரயில் சேவை ? , பஸ் போக்குவரத்து சேவை ?, அரச மற்றும் தனியார் அலுவலக சேவைகளும் ?
பல கோரிக்கைகளின் அடிப்படையில் இன்று (14) நள்ளிரவு 12 மணியிலிருந்தும், நாளை (15) செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளன.
அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளன,
மற்றும் அனைத்து ரயில் சேவைகளும் இன்று நள்ளிரவு 12 முதல் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபவுள்ளதாக ரயில் சேவை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அதனுடன் சேர்ந்தவாறு திட்டமிட்டபடி நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரச, பகுதி அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.



