Breaking News

பிஸ்மி கின்டர்காடனின் 2016ம் கல்வியாண்டுக்காக புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு.

காத்தான்குடி மிகச் சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி கின்டர்காடனில் 2016ம் கல்வியாண்டுக்காக புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு கடந்த 05 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிஸ்மி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. பிஸ்மி கின்டர்காடனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிஸ்மி கின்டர்காடனின் ஆசிரியைகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இதன் போது பழைய மாணவர்களால் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதோடு இனிப்புப் பண்டங்களும் பலூனும் வழங்கிவைக்க்கப்பட்டன.

அத்தோடு இங்கு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெற்றதோடு மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-