அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வு
புதிய வருடத்தை வரவேற்கும் முகமாக மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு நகரில் நடத்தப்பட்டது .
வன்முறையற்ற வாழ்க்கை முறையினை மீளவும் ஆக்கிடுவோம் பெண்களின் வாழ்விலும் ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காண்போம் , பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வீடுகளை சமூக்கங்களை நாடுகளை உலகை உருவாக்குவோம்
எங்களின் ஊரில் , எங்களின் வீட்டில் அன்பை நிறைத்திடுவோம் பெண்களின் வாழ்விலும் ,ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காப்போம் அன்பின் வழியிலே வாழ்வினைக் கூட்டி வன்முறையற்ற வாழ்வினை ஆக்கி இணைந்தது மகிழ்ந்து உயர்வு பெற்று வாழ வேண்டும் என வாத்துகின்றோம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறு பிறந்துள்ள புதிய ஆண்டினை வரவேற்று மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு அமைப்பினால் விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது .
இந்த நிகழ்வு மட்டக்களப்பு நகரில் புதிய வருடத்தை சிறப்பிக்கும் முகமாக அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் இனிப்புகள் வழங்கி தமது விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினர் .
இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதுவருட வாழ்த்து செய்தியுடன் மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்



