Breaking News

சிவகார்த்திக்கேயனுடன் நடிக்க போட்டா போட்டி போடும் "ராசி"யில்லா நடிகைகள்!

சிவகார்த்திக்கேயனுடன் ஒரு படத்தில் நடித்தால் தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகி விடலாம் என்ற புதிய நம்பிக்கை தமிழ் நடிகைகள் மத்தியில் உருவாகியுள்ளதாம். 

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழில் மெரினா படம் மூலம் ஹீரோ ஆனவர் சிவகார்த்திக்கேயன். தனது நகைச்சுவைப் பேச்சாலும், கடின உழைப்பாலும் தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக அவர் வலம் வருகிறார். 

அவரது நடிப்பில் வெளியான ரஜினி முருகன் இந்தாண்டின் முதல் வெற்றிப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் வசூல் மழை பெருவெள்ளமாக மாறியுள்ளதாம்.

அதேபோல், ராசியில்லாதவர்கள் என முத்திரை குத்தப்பட்ட நடிகைகள் சிலரும் சிவகார்த்திக்கேயன் படத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார்களாம். இவர்கள் ஸ்ரீதிவ்யாவையும், கீர்த்தி சுரேஷையும் பார்த்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.