Breaking News

நிரந்தர நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள்கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்

தங்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகாமையில்  கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கவனயிர்ப்பு போராட்டத்தின் போது  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் ரீ.கிஷான் தெரிவிக்கையில்,

 கடந்த காலத்தில் கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து  கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம் ,,

இது தொடர்பாக பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்திய போதிலும்  எமக்கான வேலைவாய்ப்பை வழங்குவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது  .

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற சுமார் 1,400 பட்டதாரிகள் உள்ளனர்.

35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளான பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

உடனடியாக மகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கமும் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு எமது பட்டதாரிகளை நியமிக்க வேண்டும்.

என  பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயிர்ப்பு போராட்டத்தில் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

 இன்று இடம்பெற்ற கவனயிர்ப்பு போராட்டம் தொடர்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்   பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வியாலேந்திரன் மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ் .ரங்கநாதன் ஆகிய இருவருக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார் .