Breaking News

முதல் தடவையாக உலகப் பொருளாதார மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு!

வருடம் தோறும் இடம்பெறும் உலகப் பொருளாதார மன்றத்தின், 2016ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சுவிற்சர்லாந்து செல்லவுள்ளார். இந்த மாநாடு சுவிற்சர்லாந்தின், டாவோஸ் நகரில் வரும் 20ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வரும், உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டுக்கு, இலங்கைகும் இம்முறை முதல் தடவையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மற்றும் அரசுத் தலைவர்களுக்கு மட்டும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. 

இம்முறை மாநாட்டுக்கு, பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள், பொருளாதாரத்துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட அனைத்துலக நிதி அமைப்புகளின் உயர் பிரதிநிதிகள் என சுமார் 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.