மேலும் ஆறு மாதத்திற்கு கால நீடிப்பைக் கோரும் காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் பரணகம ஆணைக்குழு
இலங்கையில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை நடத்தும், ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைவதால், மேலும் ஆறு மாதகால கால நீடிப்பைக் கோரியுள்ளதாக செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.
இவ்வாணைக்குழு தமது செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவாறு காலநீடிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாணைக்குழுவின் பதவிக்காலம், ஏற்கனவே நான்கு தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டது.



