திருடனை பிடிக்க உதவுபவருக்கு ஆண்டு முழுவதும் இலவச பீட்சா இப்படிக்கு நிர்வாகம்
அமெரிக்காவின் கொலரடா மாகாணத்தில் டென்வர் நகரில் பிரபல ஓட்டல் உள்ளது. சம்பவத்தன்று திருடன் ஒருவன் பின்புற ஜன்னல் வழியாக ஓட்டலுக்குள் நுழைந்தான்.
பின்னர் அங்கு இருந்த 2 அலமாரிகளில் வைத்திருந்த சுமார் ரூ.65 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றான். அக்காட்சி கண்காணிப்பு காமிராவில் வீடியோ ஆக பதிவாகி உள்ளது.
இது குறித்து ஓட்டல் உரிமையாளர் பாட்ரிக் ஒயிட் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் தீவிர முயற்சி எடுத்தும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ஓட்டலில் கொள்ளையடித்த திருடனை கண்டு பிடிக்க போலீசுக்கு தகவல் தந்து உதவுபவருக்கு ஒரு ஆண்டு முழுவதும் ‘பீட்சா’ இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.



