Breaking News

நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்-படங்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன .

இதன் ஒரு நிகழ்வு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் பிரதேச செயலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுதன் தொடர்ந்து  செயலக வளாகத்தில் தேசிய மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ் . யோகராஜா . பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .யதிஸ்குமார், பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஆர் .ஜெகநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தைகள் ஆகியோர் கலந்துகொண்டனர்