தேசிய ரீதியில் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை உடல்பயிற்சி வாரமாக அனுஸ்டிக்கப்படுகிறது
ஆரோக்கியமான நாட்டையும் ,நாட்டு மக்களையும் உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு அமைவாக தேசிய ரீதியில் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை உடல்பயிற்சி வாரமாக அனுஸ்டிக்கப்படுகிறது .
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் “உற்சாகமான வாழ்க்கையின் மூலம் அனைவருக்கும் சுகம் , மகிழ்சி மற்றும் ஆனந்தம் “ எனும் தலைப்பில் உடல்பயிற்சி நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது .
இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இப்ரா லெப்பை தலைமையில் மட்டக்களப்பு வைத்தியசாலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது .
இந்த உடல்பயிற்சி நிகழ்வில் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்



