Breaking News

ஈரானிடமிருந்து குறைந்த விலையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யமுடிந்தால் இலாபத்தை நாட்டு மக்களே அனுபவிப்பர்.

மீண்டும்  ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதுற்றி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு உறுப்பினர்களிடம் கலந்துரையாடுவதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தேரிவித்துள்ளர் .

தற்போது உலக சந்தையில் குறைவடைந்துள்ள மசகு எண்ணெய்யின் விலைக்கு அமைவாக, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் பெற்றுக் கொள்ளமுடியுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மசகு எண்ணெய்க்கான விலைச்சுட்டெண் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதால் , அதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.