Breaking News

சவுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த மட்டக்களப்பை சேர்ந்த நாகையா சரவணபவனின் உடல் ஒரு மாத காலத்தின்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது


2015.12.11 ஆம் திகதி சவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த  மட்டக்களப்பை சேர்ந்த நாகையா சரவணபவனின் உடல் ஒரு மாத காலத்தின் பின் நேற்றிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது டுள்ளதாக  உறவினர் தெரிவிக்கின்றனர் .

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார் . இவர் 2004 ஆம் ஆண்டு தொழிலுக்காக சவூதி நாட்டுக்கு சென்றுள்ள நிலையில்   கடந்த   2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து மீண்டும் தொழிலுக்காக சவூதி நாட்டுக்கு சென்றிருந்த வேளையில் கடந்த  2015.12.11 ஆம் திகதி சவுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில்  உயிரிழந்துள்ளதாக உறவினர் தெரிவிக்கின்றனர் .

இவரது உடல்  திசவீரசிங்கம் 37/19  முதலாம் குறுக்கு வீதி  மட்டக்களப்பு  முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று   மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்துள்ளனர் .