வக்கீல் கைதானார்
நீதிமன்றம் விடுத்த உத்ரவை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், சட்டத்தரணியான நுவான் போபேயும் பிறிதொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் கொலன்னாவை, மீதொட்டுமுல்லவில் உள்ள குப்பைமேடு விவகாரம் தொடர்பில், நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவையும் மீறி இவ்விருவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையே கைதாகியமைக்கான காரணமாக தெரிவிக்கபடுகின்றது.



