பல்கலைக்கழங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 10%த்தால் அதிகரிக்கத் தீர்மானம்
அண்மையில் வெளியான 2015ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்காகப் பல்கலைக்கழ அனுமதியைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, 10 வீதத்தால் அதிகரிக்கத் உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெளியான பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தும் அத்துடன் , பரீட்சார்த்திகளால் விண்ணப்பிக்கப்பட்டுள்ள மீள்திருத்த முடிவுகளுக்காகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா, தெரிவித்தார்.
மேலும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்ட தொழிநுட்பப் பிரிவிலும் பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதால் தொழிநுட்பம் சார்ந்த 28 பட்டப்படிப்புக் கற்கை நெறிகளை நாடளாவிய ரீதியிலுள்ள 12 பல்கலைக்கழகங்களில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவற்றில் ருஹூணு, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்கள், தொழிநுட்பம் சார்ந்த கற்கை நெறிகளுக்காக தனியான பீடத்தை அமைப்பதற்கு இம்முறை முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.



