ஊறணி பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் 10வயது சிறுவனுட்பட மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நேற்று மாலை நான்கு மணியளவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் ஊறணி பகுதியில் ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கல்களுடன் பின்னால் எரிவாய்வு ஏற்றி வந்த லொறி மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இடம்பெற்ற விபத்தின் போது மோட்டார் சைக்கல்களில் பயணித்த 24 வயது இளைஞன் மற்றும் 10 வயது சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .



