இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இன்று காலை பத்து மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் கோவில் வீதியில் ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இடம்பெற்ற விபத்தின் போது மோட்டார் சைக்கல்களில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .



