Breaking News

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புதுவருட விசேட நிகழ்வுகள்

2016  புதிய ஆண்டினை  சிறப்பிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன .


இதன் ஒரு நிகழ்வாக  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் புதுவருட விசேட  நிகழ்வுகள்  பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில்  இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி. எஸ் .எம் , சார்ள்ஸ் கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் 2016 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கின்ற வேளையில்  கடந்த ஆண்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் என்று எதையும் செய்துகொள்ள முடியாவிட்டாலும்  நூறு நாள் வேலைத்திட்டத்தை இலங்கையிலே சிறப்பாக செய்து முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது .

அதேபோல் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களில் சமூகம் சார்ந்த பல வேலைத்திட்டங்களை செய்ய வேண்டியவர்களாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் .இந்த மாவட்டத்தில் நடைபெறுகின்ற நல்ல விடயங்கள் நல்ல அடைவுகள் ,இந்த மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை அதில் மக்கள் ஏற்றுகொள்கின்ற திருப்தி  அதனூடாக அரசியல் தலைமை பீடம் தருகின்ற ஆதரவு இவை அனைத்துக்கும் அரச உத்தியோகத்தர்களின் சேவை யிலே தங்கியுள்ளது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது . காரணம் இது நகரத்தையும் நகரத்தை சூழ்ந்த பகுதியை கொண்டிருப்பதோடு ,கொள்கைகளில்  திட்டமிடல் ,அபிவிருத்திகளில் மையமாக கொண்டிருக்கும் பிரதேச செயலகமாக இருக்கிறது . எதிர் வருக காலங்களில் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறை படுத்தப்படவுள்ளன .

உலக வங்கி அனுசரணையில் அபிவிருத்தி திட்டங்களுக்கு இலங்கையிலே அதிகூடிய உதவி தொகையை பெற்றுக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்ட இருப்பதாகவும் தெரிவித்தார்.


இடம்பெற்ற புதுவருட சிறப்பு நிகழ்வின்  போது சிற்றுண்டி பரிமாறப்பட்டு புதுவருட நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட்டது .


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .