Breaking News

இன்று முதல் புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன

புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

இவ்வதிகரிப்பானது வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமானது 7,500ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக  அறவிடப்படவுள்ளது. அத்துடன்  சாதாரண சேவையூடாக பெறப்படும்  அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமானது  ரூ 2,500 இல் இருந்து  ரூ 3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஒருநாள் சேவையூடாக கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கு 2,500 ரூபா அறவிடப்படுவதுடன், சாதாரண சேவையில் கடவுச் சீட்டை விநியோகிப்பதற்கான செவைக்கட்ணமும் மாற்றப்படவில்லை எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்