Breaking News

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பொங்கல் விழா நிகழ்வுகள்

உழவர் திருநாளை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும்  உழவர் திருநாள் பொங்கல் விழா நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. 

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகமும் கலாமன்றங்கள் மற்றும் பிரதேச சமூக மட்ட அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட  உழவர் திருநாள் பொங்கல் விழா   சிறப்பு நிகழ்வுகள் இன்று மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ் . சுதாகர் தலைமையில் பொங்கல் விழா பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது .

இந்நிகழ்வினை தொடர்ந்து பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள் செயலக மண்டபத்தில் இடம்பெற்றதுடன்

இந்த பொங்கல் விழா நிகழ்வில்  பிரதேச செயலக சகல அலுவலக உத்தியோகத்தர்களும் , பிரதேச செயலக கிராம சேவை பிரிவில் உள்ள கிராம மக்களும் பாடசாலை சிறார்களும் கலந்து சிறப்பித்தனர்