Breaking News

பட்டியலில் அடுத்து நானே உள்ளேன் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்கள் தொடர்பில் அசாத் சாலி கருத்து.

அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன காலமானதாலும், ஏ.ஆர்.ஏ.ஹாபிஸ் பதவியை இராஜினாமா செய்தமையாலும் பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவாறானநிலையில், மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் அவரிடமே கேள்வியெழுப்பினர்.

அதற்கு அசாத் சாலி பதிலளித்துக் கூறியதாவது;

உண்மையிலேயே நான் போட்டியிடுவதற்கே எதிர்பார்த்திருந்தேன். போட்டியிட வேண்டாம் எனவும் தேசியப் பட்டியலில் உறுப்புரிமை வழங்குவதாகவும் கூறினார். பட்டியலில் எனது பெயரே உள்ளது. பட்டியலில் உள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனில் அதில் நானே காணப்படுகின்றேன். எனினும், பிரதமர் நாட்டில் இல்லை என நான் எண்ணுகின்றேன்.