Breaking News

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாவிடை நூல்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலைகளில் தரம்05 ,11  ,13 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாவிடை அடங்கிய நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக ஒழுங்கமைப்பில் ஏசியா  பவுண்டேசன் நிதி அனுசரணையில்  பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினாவிடை அடங்கிய நூல்கள் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு வின்செட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது .

ஏசியா பவுண்டேசன் நிறுவனம் பாடசாலை மாணவர்களின் மத்தியில் வாசிப்பு திறனையும் , பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து இலவச நூல்களை வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.

இதன்கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் , கல்வி பொது சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வினா விடை அடங்கிய நூல்களும் மற்றும் ஆங்கில அறிவினை மேம்படுத்துவதற்கான ஆங்கில நூல்களும்  இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள 64 பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் ஏசியா பவுண்டேசன் பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி , மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளான உதவி கல்விப் பணிப்பாளர்  த .யுவராஜா ( தமிழ் ) உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி . எஸ் . கங்கேஸ்வரன் (கல்வி அபிவிருத்தி ) பிரதி கல்விப் பணிப்பாளார் பி .கோவிந்தராஜா ( நிர்வாகம் )  மட்டக்களப்பு கல்வி அலுவலகம் முகாமைத்துவம் கைதர் அலி , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , ஏறாவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் . எம் .பாலசுப்பிரமணியம்   மற்றும்  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .