ஜனவரி 9 இல் ஜனாதிபதியுடன் நேரடியாக உரையாடி தமது பிரச்சினைகளை கூற முடியும் !
இம்மாதம் 9ம் திகதி ஜனாதிபதி நேரடியாக தங்களது பிரச்சினைகளை கூறுவதற்கு, மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இதன்போது பொது விடயங்கள் சம்பந்தமாக மக்களுக்கு காணப்படும் குறை நிறைகளை, முறைப்பாடுகளை தனிப்பட்ட முறையில் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவிக்கவே இந்த விசேட திட்டம் ஏற்படுத்தபடவுள்ளது.
இதன்போது அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியுடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டும். இன் நடவடிக்கையின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



