எதிர் காலத்தில் பட்டதாரிகள் மாத்திரமே தாதி சேவை இணைக்கப்படுவர்
எதிர்காலத்தில் தாதிகளாக பட்டம் பெற்றவர்களை மாத்திரம் தாதியர் சேவையில் இணைத்து கொள்ள சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு தாதி பட்டதாரிகளை உருவாக்க மருத்துவ தாதி சேவை பீடம் ஒன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு இணைக்கப்படவுள்ள தாதியர்களுக்கு பயிற்ச்சிகளை வழங்க தாதி சேவை தொடர்பான பட்டப்பின்படிப்பு படித்தவர்களின் மூலம் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.



