கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் சத்தியாகிரக போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் மேற்கொண்டனர் .
தனியார் துறை மருத்துவ பீட மாணவர்களுக்கு அரசதுறை மருத்துவ பீடத்தில் பயிற்சி பெறுவதை எதிர்க்கும் முகமாகவும் இலங்கை கிழக்கு பல்கலைக்கழதத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மாணவர்கள் இந்த எதிர்ப்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தற்போது இலங்கை மக்களுக்காக இருக்கும் கல்விக்கான வாய்ப்பை பாதுகாக்க வேண்டும் . கல்விக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுகொண்டு இருக்கும் தெற்காசியா தொழில்நுட்ப மற்றும் வைத்திய கலா பீட நிறுவனத்தின் செயற்பாடுகள் நிரித்தப்பட வேண்டும் .வைத்திய கல்லூரிகளுக்கு மாணவர்கள் வெட்டு புள்ளியை மையமாக வைத்து அனுமதிக்கப்பட வேண்டும் .
அதை விடுத்து பொருளாதார மட்டத்தை மையமாக வைப்பதை நிறுத்த வேண்டும் . பொருளாதாரத்தின் அளவை வைத்து அனுமதி வழங்கும் தொழில்நுட்ப மற்றும் வைத்திய கலா பீடத்தை மூடப்பட வேண்டும்..
வடகொழும்பு வைத்திய கல்லூரியை போன்று பொது மக்களின் உடைமையாக மருத்துவ பீட கல்வியை மாற்ற வேண்டும் .
அதேவேளை அங்கு தற்போது கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் இந்த சத்தியாகிரக போராட்டத்தை இன்று மேற்கொண்டனர் .



