Breaking News

கல்லடி சுற்று வட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை உட்பட மகள் இருவரும் படுகாயம்முற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லடி சுற்று வட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லடி பிரதேசத்தில் வசித்த கல்வித் திணைக்களத்தில் ISA யாகக்கடமை புரிந்த விநாயகமூர்த்தி என்பவர் தனது மகளையும், உறவினரின் மகளையும் காலையில் ரியூசன் வகுப்பிலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியிலே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்தில் சிக்கிய மூவரில் விநாயகமூர்த்தி என்பவரையும் அவரது மகளையும் மேலதிக சிகிச்சைக்கென மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து அம்பாறை வைத்தியசாலையின்  தீவிர சகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும், மற்றும் இவர்களுடன் பயணித்த மற்றைய மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .