அஜீத்திற்கு ஜோடியாக நடிக்கவே ஆசை, தங்கையாக அல்ல
அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவே ஆசை, அவருக்கு தங்கையாக நடிக்க நான் ஆசைப்படவில்லை என்று நடிகை ஸ்ரீதிவ்யா தெரிவித்திருக்கிறார். ஸ்ரீதிவ்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஈட்டி திரைப்படம் கடந்த ஆண்டின் ஹிட் படங்கள் பட்டியலில் இடம்பிடித்தது.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அஜீத் எனக்கு செட்டாக மாட்டார். விஜய்யுடன் சேர்ந்து நடிக்கவே ஆசை என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீதிவ்யாவிற்கு எதிராக கருத்துகளை பதிவிட்டனர்.
இந்நிலையில் இதற்கு தற்போது ஸ்ரீதிவ்யா விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் "வேதாளம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்க படக்குழுவினர் என்னை அணுகினார்கள். அவருக்கு ஜோடியாக நடிக்கவே விருப்பம், தங்கையாக நடிக்க விருப்பம் இல்லை என்று தான் நான் கூறியிருந்தேன்" என அவர் தெரிவித்துள்ளார். வேதாளம் படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்குப் பதிலாக நடித்த லட்சுமி மேனனுக்கு அப்படத்தின் மூலம் பெரும் புகழும், பேரும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதிவ்யா தற்போது கார்த்தியின் காஷ்மோரா, விஷாலின் மருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் பெங்களூர் நாட்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.



