Breaking News

கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்டால் மாத்திரமே படையினருக்கு விடுதலை

ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் பேசிய  ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப், எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான், பிடிபட்ட படகுகளையும், பத்து வீரர்களையும் விடுதலை செய்வோம் என ஈரான் பிடிவாதமாக இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.