Breaking News

தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கட்டடங்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தமக்கான உடற்பயிற்சிகளை கல்லடி கடற்கரையில் மேற்கொண்டனர்.-படங்கள்

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைவாக மட்டக்களப்பு கட்டடங்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தமக்கான உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டடங்கள் திணைக்கள மாகணப்பணிப்பாளர் எந்திரி.அ.வேல்மாணிக்கம் அவர்களால்  தேசிய கோடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் அலுவலக உத்தியோகத்தர்களால் பாடப்பட்டது.

அந்நிகழ்வை தொடர்ந்து பிரதம எந்திரி அ.சுரேஷ்குமார் அவர்கள் உரையாற்றினார் இவ்வுரையின்போது பிரதம எந்திரி உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், சித்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான '8'  வடிவ முறையிலான நடைப்பயிற்சியையும் பற்றி விளக்கி கூறினார்.

அதனை தொடர்ந்து  சிறப்புரையாற்றிய பணிப்பாளர் அவர்கள் உடற்பயிற்சியானது ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபடல் வேண்டும் எனவும் அத்தோடு சிறுவயதில் இருந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பெரும்பாலான தொற்றா நோய்களை வராமல்தடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

அந்நிகழ்வை தொடர்ந்து பிரதம எந்திரி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அனைத்து உத்தியோகத்தர்களும் கல்லடி கடற்கரைக்கு நடந்து சென்று முழுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்

உடற்பயிற்சியை தொடர்ந்து ஆண்கள் 'எல்லே' விளையாட்டிலும் பெண்கள் வலைப்பந்து விளையாட்டிலும்  ஈடுபட்டனர் பின்னர் சிறிய தாகசாந்தியின் பின்னர் அனைத்து உத்தியோகத்தர்களும் மீண்டும் நடையாக அலுவலகம் திரும்பினர்.

இவ்வனைத்து நிகழ்வுகளிலும் மாகணப்பணிப்பாளர் அவர்கள் கூடவே இருந்து கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.