Breaking News

68 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 08 சிறைக்கைதிகள் இன்று விடுதலை.

இலங்கையின் 68 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 08 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியட்சர்  K.M.U.H அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று பெண் சிறைக்கைதிகளும் 05 ஆண் சிறைக்கைதிகளும் விடுதலைசெய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி
என்.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(லியோன்)