மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில்.
இலங்கையின்
68 வது தேசிய சுதந்திர
தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. மட்டக்களப்பு
மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை பல்வேறு நிகழ்வுகள்
இடம்பெற்றன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதனை
தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன், பிரதேச செயலக வளாக தோட்டத்தில் ஆயிர்வேத
மூலிகை செடிகள் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா உட்பட பிரதேச
செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(லியோன்)


