Breaking News

10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா... திடீரென்று மூழ்கினார்.. !

சிலந்தி பட இயக்குநர் ஆதிராமின் அதர்வணம் படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் நீரில் மிதந்தபடி இருந்த நாயகி ஹரிப்பிரியா திடீரென நீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்துத் தந்த படம் ‘சிலந்தி'. இப்படத்தை ஆதிராம் எழுதி இயக்கி இருந்தார். இவர் தற்போது தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் ‘அதர்வணம்'. 

இந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரியா ரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் ‘ரணதந்த்ரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.