இணையதளம் மூலம் தீவிரவாதத்தை பரப்புவோரைப்பற்றி துப்பு அளித்தால் ஒரு லட்சம் ...
இணையம் மூலம் தீவிரவாதத்தை பரப்பும் நபர்களைப் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் யுவான்களை சன்மானமாக வழங்கவுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாறுவதை தடுக்க இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ள சீன அரசின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள், கடந்த 2015-ம் ஆண்டு இதுபோன்ற முக்கிய தகவல்களை அளித்த 20 ஆயிரம் பேருக்கு 20 மில்லியன் யுவான்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், மேலும் பலர் அளிக்கும் தீவிரவாதம் தொடர்பான தகவல்களின் முக்கியத்துவத்துக்கேற்ப ஒரு லட்சம் யுவான் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் வகையில் சீன மொழியில் ஒரு பிரசார பாடல் வெளியாகியுள்ள நிலையில் சீன அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.



