Breaking News

100 மடங்கு வேகத்தில் நவீன தொழில்நுட்பம்: 5 வினாடிகளில் செல்போனில் சினிமாவை download செய்யும் வசதி

செல்போன்களில் சினிமா படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. தற்போது ‘4ஜி’ தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன்களில் ஒரு சினிமா படத்தை பதிவிறக்கம் செய்ய 8 நிமிடங்கள் ஆகின்றன.

ஆனால் ஒரு முழு சினிமா படத்தையும் 5 வினாடியில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

‘சாம்சங்’ மற்றும் ‘பியூஜித்சூ’ ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து அதிவேக தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல் இண்டர்நெட்டை உருவாக்கியுள்ளனர்.

அது தற்போதுள்ள இன்டர்நெட் வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது. இதை ‘5ஜி’ என்று அழைக்கிறார்கள். இதனுடன் ஆன வயர்லஸ் தொழில்நுட்பம் 2018–ம் ஆண்டுதான் முற்றிலும் முடிவடையும்.

இதன் மூலம் செல்போன்கள் மற்றும் டேபிளட்டுகளில் சினிமா படங்களை 8 வினாடிகளில் பதிவு செய்ய முடியும். கம்பெனிகளும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வசதிகளை பெற முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.