உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நான்கு தமிழ் அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் சில வருடகாலமாக எவ்வித குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்களில் தொடர்ச்சியாக முன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த 4 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



