பார்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் நடிகைகள் !!
பிரபலமான நடிகைககள் சிலர் எந்தவித ரத்த பந்தமும் இன்றி பார்ப்பதற்கு ஒரே மாதிரி உள்ளனர். உலகில் ஒருவரை போன்றே ஏழு பேர் இருப்பார்கள் என்பார்கள். பார்க்க நம்மை போன்றே இருப்பவர்களை கண்டிபிடிக்க கூட ஒரு இணையதளம் உள்ளது. எந்தவித ரத்த பந்தமும் இன்றி இப்படி ஒரே மாதிரி இருப்பவர்களை பார்க்க ஆச்சரியமாகத் தான் உள்ளது. இந்நிலையில் பார்க்க ஒரே மாதிரி இருக்கும் சில நடிகைகளை பாருங்கள்
நஸ்ரியா
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி ஹீரோயின் ஆன நஸ்ரியா போன்றே மலையாள திரையுலகில் ஒரு நடிகை உள்ளார். பிரபல நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் அஹானாவும் நஸ்ரியாவும் அச்சு அசலாக ஒரே மாதிரி உள்ளனர்
அசின்
கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து பாலிவுட்டுக்கு சென்ற அசினும் நடிகை பூர்ணாவும் பார்க்க கிட்டத்தட்ட ஒரே போன்று தான் உள்ளனர்.
திவ்ய பாரதி
பாலிவுட், டோலிவுட்டை இளம் வயதிலேயே ஒரு கலக்கு கலக்கி பிரபலமான வேகத்தில் இறந்த திவ்ய பாரதியும், நடிகை ரம்பாவும் இரட்டை சகோதரிகள் போன்று ஒரே மாதிரியாக உள்ளனர்.
மீரா ஜாஸ்மின்
தமிழ், மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை மீரா ஜாஸ்மினும், நடிகை சுஜிதாவும் பார்க்க ஒரே போன்று தான் இருக்கிறார்கள்
பாவனா
எந்த சம்பந்தமும் இல்லாத நடிகை பாவனாவும், பெங்காளி நடிகை தனு ராயும் பார்க்க சகோதரிகள் போன்று உள்ளனர்.
அபிராமி
நடிகை அபிராமியும், வல்லக்கோட்டை, கனகவேல் காக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹரிப்ரியாவும் பார்த்தால் அச்சு அசப்பாக உள்ளனர்.



