ஓமான் நாட்டில் ஆசியப் பெண்களை வைத்து விபசார விடுதி நடத்திய மூன்று பெண்கள் கைது
ஓமான் நாட்டில் உள்ள அல்-புரைமி மாநிலத்தில் விபசார விடுதி நடத்திவந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்,
வீட்டுவேலை செய்வதற்காக ஆசிய நாடுகளில் இருந்துவந்து, முதலாளிகளுடன் தகராறு செய்து ஓடிவந்துவிடும் சில பெண்களை வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் வாலிபர்களுக்கு விருந்தாக்கிய மூன்று விபசார தரகர்களை கைது செய்துள்ள போலீசார், வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு முன்னதாக குடியிருப்பவர்களைப் பற்றிய விபரங்களை நன்கு தெரிந்து கொள்ளுமாறு அப்பகுதி மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.



