பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் கல்விக் களச்சுற்றுலா-படங்கள்
காத்தான்குடியில் இயங்கிவரும் பிஸ்மி கின்டர்காடன் பாலர் பாடசாலை சிறார்களுக்கு வெறுமனே புத்தக கல்வியை மாத்திரம் வழங்குவது என்பதற்கு அப்பால் நடைமுறை ரீதியாக அவர்களை பயிற்றுவிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது.
அந்த வகையில் மாணவர்களை மாதாந்தம் ஒரு கல்விக் களச்சுற்றுலா அழைத்துச் செல்வதென அதனது நிர்வாகம் தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதற்கமைவாக அண்மையில் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்கள் ,பிஸ்மி கின்டர்காடனின் பணிப்பாளர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு மாணவர்களுக்கு முஸ்லிம்களின் பண்டைய வாழ்க்கை முறை குறித்தும் முஸ்லிம்களின் வரலாறு குறித்தும் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது.
மாணவர்கள் நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பொருட்களையும் நுணுக்கமாக அவதானித்ததோடு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் ஆசிரியைகளிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.
அத்தோடு நூதனசாலையின் மேல் மாடியில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சி கூடத்தில் விலங்குகள் தொடர்பான ஒரு ஆவணப்படம் ஒன்றையும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.















