கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிறுஷ்னன் அட்டாளைச்சேனை விஜையம்
அபூ அஹ்னப்
மத்திய அரசின் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிறுஷ்னன் நேற்று மாலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.
கல்லூரி அதிபர் மெளலவி ஏ.சுபைர் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் ஆகியோருடன் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அமைச்சரின் குறித்த விஜையத்தின் போது கல்லூரியில் ஏற்பட்டிருக்கும் முக்கிய தேவைகள், அபிவிருத்தி செய்யப்படவேண்டிய இடங்களையும் அமைச்சருக்கு சுகாதார அமைச்சர் நஸீர் மற்றும் கல்லூரி அதிபர் சுபைர் ஆகியோர் கண்பித்தமை குறிப்பிடத்தக்கது.



