சுகாதார அமைச்சர் நஸீர் தலைமையில் தீகவாபி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
அட்டாளைச்சேனை தீகவாபி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முகம்மது நஸீர் தலைமையில் நேற்று மாலை (31) குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது மூவின மக்களுக்கும் சம அளவிலான சேவையினை கிழக்கில் சகல வைத்தியசாலைகளிலும் மேற்கொண்டுவரும் அமைச்சர் நஸீர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வைத்தியசாலைக்கு விஜையம் செய்து வைத்தியசாலைகளின் குறைகளைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.










