Breaking News

மட்டக்களப்பு இருதயபுரம் கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா


(லியோன்)

கிழக்கில்   பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு  இருதயபுரம் கருவப்பங்கேணி  புனித வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி   அருட்தந்தை   நவரட்ணம்  தலைமையில் பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்த்  ,அருட்பணி  நோட்டன்  , அருட்பணி  மொறாயஸ் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நேற்று ஒப்புக்கொடுத்தனர் .

மட்டக்களப்பு  இருதயபுரம்  கருவப்பங்கேணி  புனித வனத்து அந்தோனியார் ஆலய  வருடாந்த திருவிழா பங்குதந்தை  லெஸ்லி ஜெயகாந்த்  தலைமையில்  29.01.2016  வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .   

ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும்,  பிராத்தனைகளுடன்  திருப்பலிகளும்  இடம்பெற்றது .

30.01.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு  விசேட ய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து  திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .

ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு அருட்தந்தை   நவரட்ணம்  தலைமையில் பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்த்  ,அருட்பணி  நோட்டன்  , அருட்பணி  மொறாயஸ் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு  திருப்பலியின்  பின்  திருச்சுருவ  பவணியும்  ஆலய திருவிழா   திருநாள்  கொடியிறக்கத்துடன்   ஆலய   வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .

அங்கு இடம்பெற்ற ஆலய  திருவிழா திருப்பலியில்    பெருமளவான மக்கள் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர் .