Breaking News

சீன புத்தாண்டான, குரங்கு ஆண்டு, நேற்றுமுதல் தொடங்கியது

இதையொட்டி, சீன மக்கள் கோவில்களுக்கு சென்றும், கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.சீன புத்தாண்டு தினம், ஒவ்வொரு ஆண்டும், ஒன்பது விலங்குகளில், ஏதாவது ஒரு விலங்கை அடிப்படையாக வைத்து அமையும்; அந்த வகையில், இந்த ஆண்டு குரங்கு ஆண்டாக அமைந்துள்ளது.புத்தாண்டை வரவேற்று, நாடு முழுவதும், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோவில்கள், கேளிக்கை பூங்கா, ஹோட்டல், என, பல இடங்களுக்கு சென்று, விடுமுறையை மக்கள் கழித்தனர்