Breaking News

ஜெர்மனியில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் !!!

ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் இன்று இரு பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் பலர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முனிச் நகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட் ஐப்லிங் அருகே நிகழ்ந்த இந்த விபத்துக்கான காரணம் பற்றி சரியாக தெரியவராத நிலையில் இரு ரெயில்களின் பல பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்ததாகவும், அவற்றில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், மேலும் பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் அவசரகதியில் செய்தி வெளியிட்டுள்ளன.