வழக்கமா மத்தவங்களுப்பு 'அப்பு' விடும் சல்மானையே அறைந்த அனுஷ்கா
சுல்தான் படத்தில் வரும் சண்டை காட்சியில் நடிக்கையில் அனுஷ்கா சர்மா சல்மான் கானை கன்னத்தில் அறைந்துவிட்டாராம். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான் நடித்து வரும் படம் சுல்தான். சுல்தானில் சல்மான் கானுடன் ஜோடியாக அந்த நடிகை நடிக்கிறார், இந்த நடிகை நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இறுதியில் சல்மானுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு தான் கிடைத்தது.



