"டார்லிங் பட பேய்க்கு கையில் காயம்..
"டார்லிங்" படத்தில் நடித்த நிக்கி கல்ராணிக்கு அவர் புதியதாக நடித்து வருகின்ற படத்தின் படப்பிடிப்பின்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாம். எழில் இயக்கும் புதிய படம் "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்". விஷ்ணு கதாநாயகனாக நடித்து இந்த படத்தை தயாரிக்கிறார். நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இசை அமைக்கிறார்.



