மார்ச் 19 முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றிய கலந்துரையாடல்
சப்னி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விகரமசிங்க கலந்துகொள்ளவுள்ளா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு மார்ச் 19 ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு 2016.02.26 இரவு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பாலமுனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தலைமையில் சிறந்த முறையில் மாநாட்டுத்திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில்வாயப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச கட்சி முக்கியஸ்தர்களும் பாலமுனைப் பிரதேச கட்சிப் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






