Breaking News

அரச மருத்துவ சம்மேளனம் விலைக்கு போனதை என்னால் உறுதிபடுத்த முடியும் : ரணில்

அரச மருத்துவ சம்மேளனம் மற்றும் பிற நிறுவனங்களும் மீது விசாரணை நடத்துமாறுகோரி பிரதமர் அலுவலகம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்தியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மறுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் செய்த முறைப்பாடுகளுக்கு இணங்கவே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன் அடிப்படையிலேயே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீதும் விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அரச மருத்துவர் அதிகாரிகள் சம்மேளனம் விலைக்கு போனதை தம்மால் நிரூபிக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.