IPL வீரர்கள் ஏலத்தில் வாட்ஸன்டன் அதிகூடிய தொகையான 9.5 கோடி இந்திய ரூபாய்க்கு விற்கபட்டுள்ளர்
IPL வீரர்கள் ஏலமானது யுவராஸ் சிங், ஷேன் வட்ஸன், இஷாந் ஷர்மா, மற்றும் கெவின் பீட்டர்ஸன் ஆகிய வீரர்கள் ஏலத்துடன் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. குறிப்பாக புனே சூப்பர்ஜியன்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் தமக்கான புதிய குழுவை அமைக்க முயற்சித்து வருகின்றன.
அதன் பிரகாரம் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்ட வீரர் வாட்ஸனை 9.5 கோடி இந்திய ரூபாவுக்கு ரோஜல் சலஞ்சர்ஸ் அணி பெற்றுள்ளது. அதேவேளை அதிக அனுபவம் வாய்ந்த வீரரான யுவராஜ்சிங் 7 கோடி இந்திய ரூபாவுக்கு சன்றைஸ் ஹைதராபாத் அணிக்கு விற்பனையாகியுள்ளார்.
மேலும் பீற்றர்ஸனை 3.5 கோடிக்கும் இஷாந் ஷர்மாவை 3.8 கோடிக்கும் புனே அணி பெற்றுள்ளது.
இந்த வருடத்திற்கான வீரர்கள் ஏலத்தில் ஷேன் வாட்ஸன் அதிகூடிய தொகையான 9.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளார். அதேவேளை யுவராஜ் சிங் இரண்டாவது அதிகூடிய தொகைக்கு விற்பனையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



