'அந்த' இடத்தில் ரொம்ப அரிக்குதா? இதோ அதைத் தடுக்க சில வழிகள்!
பூஞ்சணத் தொற்றுக்களால் ஆண் மற்றும் பெண்ணின் கவட்டை, பிறப்புறுப்புப் பகுதி, பிட்டம், உள் தொடைகளில் கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். இருப்பினும் இப்பிரச்சனையால் ஆண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். மேலும் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை உடல் பருமன், இறுக்கமான உள்ளாடை அணிவது, அதிகமாக வியர்வை வெளியேறுவது, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை.
இந்த அரிப்புக்கள் தீவிரமானால் அப்பகுதி சிவப்பாகவும், எரிச்சலுடனும், தோல் உரிந்தும் காணப்படும். இந்த பிரச்சனையானது பரவக்கூடியது. எனவே உள்ளாடை மற்றும் உடுத்தும் துணிகளை மற்றவருடன் பகிர வேண்டாம். இப்பிரச்சனையை சரிசெய்ய ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை தினமும் பின்பற்றினால் நிச்சயம், இந்த பூஞ்சை தொற்றில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!
டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து அரிப்புள்ள இடத்தில் தினமும் இரண்டு முறை தடவி வந்தால், விரைவில் குணமாகும். ஒருவேளை இந்த எண்ணெய் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தினால், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 4-5 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பின் பயன்படுத்துங்கள்.
ஆப்பிள் சீடர்
வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது. மேலும் இது சருமத்தில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளில் இருந்து விடுவிக்கும். ஆகவே 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இதேப் போல் ஒரு நாளில் 2-3 முறை செய்தால், சீக்கிரம் இந்த அரிப்பு நீங்கும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் கூட நோய்த்தொற்றுக்களை அழித்து நல்ல நிவாரணம் தரும். அதற்கு 90 சதவீத ஐசோப்ரோபைல் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர்ந்ததும், பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
மௌத் வாஷ்
மௌத் வாஷ்ஷை பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டன் பயன்படுத்தி தேய்த்து, உலர விட வேண்டும். இம்முறையால் சற்று புண்படக்கூடும். இருப்பினும் இந்த வழியின் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் காயங்கள் இருந்தால், இதனைப் பயன்படுத்த வேண்டாம்.







